Latest News

January 16, 2016

வைத்தியர் வரதராஜா அவர்களின் தமிழின படுகொலைக்கான சாட்சிகள்
by admin - 0

இறுதி யுத்த களத்தில் பல உயிர்களை காப்பாற்றிய வைத்தியர் அவர்களின் சாட்சிகள்


நான் மே 15 அன்று காயமடைந்து, எனது சகாக்களால்  முள்ளிவாய்க்கால் மேற்கில் இருந்த இராணுவ வைத்திய சாலையில் ஒப்படைக்கப் பட்டேன். பின்பு அவர்கள் என்னை ஆனந்தபுரம் ஊடக கைவேலி பாடசாலியில் இருந்த இன்னொரு இராணுவ வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு இருந்த இராணுவத்தினரும் இராணுவ வைத்தியர்களும் என்னை என்ன செய்வது என்று தொடர்பாடல் கருவி மூலம் பலருடனும் கதைத்துக்கொட்டிருந்தார்கள். 

நேரம்  கிட்டத்தட்ட பி.ப.6.30 - 7.00 இருக்கும். ஓரளவுக்கு இருட்டி விட்டது. என்னை ஒரு இராணுவ ரக் (Truck) ஒன்றில் ஏற சொன்னார்கள். நான் ரக்கில் ஏற  மிகவும் கஷ்டப்பட்டேன், எனது வலது கை கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது, நெஞ்சுக் காயமும் வயிற்றுக்காயமும் வலித்துக்கொண்டிருந்தது.
ஒருவாறு வாகனத்தில் ஏறியபின் அங்கு நான் இருப்பதற்கு  ஒரு மெல்லிய வாங்கு மட்டுமே போடப்பட்டிருந்தது. அதுவும் வாகனம் ஓடும்போதும் பள்ளத்தில் விழும் போதும் ஆடிக்கொண்டும் சரிந்து விழுந்து விடும் போலும் இருந்தது. வாகனத்தில் ஏறிய உடனே மெல்லிய இருட்டில் எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. சற்று நேரத்தின் பின்பு எனக்கு எதிரே இருந்த வாங்கில் மூன்று பேர் இருப்பது தெரிந்தது. நன்கு கவனித்து பார்த்தேன். மூன்று பெண் போராளிகள்- கிட்டத்தட்ட 18-20 வயது இருக்கும். மூவருமே விடுதலைப்புலிகளின் இராணுவ சீருடை அணிந்திருந்தார்கள். அச்சம் கலந்த முகத்துடன் என்ன நடக்கப்போகிறது என்று தெரியாத தவிப்போடு இருந்தார்கள்.என்னை யார் என்று அவர்களுக்கு தெரிந்திருக்குமோ என்னக்கு தெரியவில்லை. 

நாங்கள் சென்ற வாகனம் நீண்ட நேர பிரயாணத்திற்கு  பின் ஒரு இடத்தில் ( ஒரு வீட்டின் முன் ) நின்றது. என்னை இறக்குவதற்கு முன் பெண் போராளிகள் மூவரையும் இறக்கி எடுத்தார்கள். அவர்கள் மூவரையும் இறக்கிய சிறிது  நேரத்தின்  பின் என்னையும் இறக்கினார்கள்.
அந்த இடத்தில் ஒரே இருள் மயம். தானாகவே பயம் வந்துவிடும் அளவிற்கு மயான அமைதியாக இருந்தது .
என்னை அந்த வீட்டின் முன் பகுதியில் இருக்கச்சொன்னர்கள். ஒரு இராணுவ அதிகாரி வந்து என்னைப் பற்றி விசாரித்தார். பின்பு எனக்கு இரவு உணவு கொடுக்க சொல்லிவிட்டு காலையில் சந்திப்பதாக கூறிவிட்டு சென்றுவிட்டார். பின்பு நான் அவரை ஒரு நாளும் காணவில்லை. என்னை வைத்திருந்தது கிளிநொச்சி என்றும் அந்த வீடு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரின் (TRO) அலுவலகம் என்பதும் அந்த சுவரில் ஒட்டி இருந்த அறிக்கைகள் மூலம் தெரிந்து கொண்டேன். என்னை சிறை வைத்திருந்த அதே வீட்டில் தான் அந்த பெண் போராளிகளையும் வைத்திருந்திருக்க  வேண்டும்.

 மறுநாள் காலையில் என்னை முகம் கழுவ வீட்டின் பின்பகுதிக்கு கொண்டு சென்ற போது நான் கண்ட காட்சி என்னை மிகவும் அதிர்ச்சிக்கு   உள்ளாக்கியது. அங்கிருந்த ஒரு மாமரத்தில் புலிகளுடைய சில சீருடைகள் வைக்கப்பட்டிருந்தது. அது பெரும்பாலும் அந்த பெண் போரளிகளுடையதாக இருக்க வேண்டும். அதன் பின்பு ....................................................


« PREV
NEXT »

No comments