Latest News

January 20, 2016

ஆங்கிலத்தில் எழுத்துப்பிழை விட்ட மாணவன்: வீட்டிற்கு சென்று சோதனையிட்ட பொலிசார்
by Unknown - 0

இங்கிலாந்தில் மாணவன் ஒருவன் ஆங்கில பாடத்தில் தவறாக எழுதிய ஒரு வார்த்தையால் பொலிசார் அம்மாணவனின் வீட்டிற்கு சென்று சோதனையிட்டுள்ளனர்.

இங்கிலாந்தின் Lancashire என்ற இடத்தில் உள்ள பள்ளியில் பயின்று வந்த 10 வயது மணவன், தனது ஆங்கில பாடத்தில் நான் மாடி வீட்டின் வசிக்கிறேன்(Terrace house) என்று எழுவதுதற்கு பதிலாக நான் தீவிரவாத வீட்டில் வசிக்கிறேன் (Terrorist house) என்று எழுதியுள்ளேன்.

Terrace என்ற வார்த்தையை Terrorist என்ற மாற்றி எழுதியுள்ளான், இதனை பார்த்த ஆசிரியர்கள் தீவிரவாத பின்னணி இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இதனை சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கும்பொருட்டு இதுகுறித்து பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற அடுத்த நாளே, அம்மாணவனின் வீட்டிற்கு சென்ற பொலிசார், அங்கிருந்த மடிக்கணணி உள்ளிட்டவைகளை சோதனை செய்துள்ளனர்.

பொலிசார் மற்றும் ஆசிரியர்களின் மாறுபட்ட அணுகுமுறையால் அதிர்ச்சிக்குள்ளான பெற்றோர், இது சாதரண விடயம் ஆகும், இது சிறிய எழுத்துப்பிழை, இதனை எளிதில் ஆசிரியர்களால் புரிந்து கொள்ள முடியும், ஆனால் அவர்கள் இவ்வாறு செய்ததால் தற்போது எனது மகன் எழுதுவதற்கே பயப்படுகிறான் எனக்கூறியுள்ளார்.

இதுகுறித்து பொலிஸ் நிலையம் கூறியதாவது, எங்களிடம் வந்த புகாரின் அடிப்படையில் சோதனையிட்டோமே தவிர, இதில் யாரையும் பாதுகாப்பதன் நோக்கம் கிடையாது என்றும் தற்போது அப்பள்ளியிலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளனர்.
« PREV
NEXT »

No comments