Latest News

January 12, 2016

‘கெப்ளர்’ கண்டுபிடித்த 100 புதிய கிரகங்கள்
by Unknown - 0

அமெரிக்க விண்வெளி ஆய்வுமையமான நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி மூலம் 100 புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கெப்ளர் தொலைநோக்கி அண்மையில் பழுதடைந்தது. இதன் இரண்டாவது சுற்று திட்டத்தில் (கே2 மிஷன்) புதிய கிரகங்களைக் கண்டறிந்துள்ளது.

கெப்ளர் குறிப்பிட்ட நட்சத்திரத்தை நோக்கி அமைந்துள்ள நிலையில், இடம்பெயரல் முறைப்படி, கெப்ளர் நட்சத்திரத்துக்கு இடைப்பட்ட பகுதியில் கிரகங்கள் கடந்து செல்லும் போது ஏற்படும் சிறிய அளவிலான வெளிச்சப்புள்ளியைக் கொண்டு புதிய கிரகங்களை கெப்ளர் கண்டறிந்துள்ளது.

இடம்பெயரல் முறையில் அதி நுட்பமான கவனிப்பு தேவைப்படும். இத்திறனை கடந்த 2013 மே மாதம் கெப்ளர் இழந்தது.

இருப்பினும் சோலார் ரேடியேசன் மூலம் மூன்றாவது சக்கரத்துக்கு அழுத்தத்தைக் கொடுப்பதன் மூலம் தொலைநோக்கியை ஸ்திரமாக வைத்திருக்கும் தீர்வை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

அரிஸோனா பல்கலைக்கழக வானியலாளர் லான் கிராஸ்பீல்டு கூறும்போது, ““தகுதியுடைய 100 கிரகங்களை கெப்ளர் கண்டறிந்தது. முதல் 80 நாள் கண்காணிப்பில் 60,000 நட்சத்திரங்கள், 7,000 இடப்பெயர்வு சமிக்ஞைகளை கெப்ளர் கிரகித்துள்ளது.

இவற்றை ஆய்வு செய்ததில் ஒரு சதவீதம் மட்டுமே தவறாக இருக்க வாய்ப்புள்ளது” என்றார். கெப்ளர் தொலைநோக்கி 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம், கிரகங்கள் தொடர்பான ஆய்வுக்காக விண்வெளியில் நிறுவப்பட்டது.
« PREV
NEXT »

No comments