விடுதலைப்புலிகள் அமைப்பில் அரசியல்துறையின் மகளிர் அணியின் பொறுப்பாளராக இருந்த தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமி எழுதிய நூல் ஒன்று எதிர்வரும் பெ்பரவரி மாதம் தமிழில் வெளியிடப்பட உள்ளதாக தெரியவருகிறது.
இந்த நூலின் சிங்கள மொழிப்பெயர்ப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இறுதிக்கட்ட போரின் போது பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்த தமிழினி பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் 2 வருடங்கள் புனர்வாழ்வு பெற்றதன் பின்னர் 2013ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.
புனர்வாழ்வு காலத்தில் அதிகளவான காலத்தை தமிழினி சிங்கள மொழியை கற்பதற்காகவே செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் அவர் இறப்பதற்கு முன்னர் எழுதிய குறிப்புகளில் “இப்படியான உன்னதமான மனிதர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த நேரிட்டமை குறித்து கவலையடைவதாக” எழுதியிருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் தமிழினி எழுதிய நூலின் விற்பனையில் கிடைக்கும் பணத்தை மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் உள்ள சிறுவர் விடுதியின் தேவைகளுக்காக செலவிடுமாறு கோரியிருந்தாகவும் தெரியவருகிறது.
பரந்தன் பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட தமிழினி தனது 43வது வயதில் கடந்த ஒக்டோபர் மாதம் 14 ம் திகதி மகரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் மரணமடைந்தார்.
இதனிடையே தமிழினி உயிரிழந்த பின்னர், இனந்தெரியாத சிலர் மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு சென்றுஇ அவரை அந்த வைத்தியசாலையில் அனுமதித்தவர்கள் பற்றி விசாரித்து, அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவருக்கும் தொந்தரவு கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஏன் தமிழினிக்கு சிகிச்சையளித்தீர்கள் எனக் கூறி, அந்த நபர்கள் மருத்துவரை அச்சுறுத்தியுள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள அந்த மருத்துவர் தனக்கு நபர்கள் பற்றி பிரச்சினையில்லை எனவும் நோயாளியை மரணத்தில் இருந்து காப்பாற்றுவது மாத்திரமே தனக்கு முக்கியம் எனக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
No comments
Post a Comment