Latest News

January 11, 2016

கடும் மகிழ்ச்சியில் மகிந்த
by admin - 0

ருவான்வெல்லையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏராளமான பொதுமக்கள் வரவேற்பளித்துள்ளனர்.

ருவான்வெல்லை , சியம்பலான்வெல விகாரையின் புதிய கட்டிடத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த விழாவின் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார்.

இதன்போது மஹிந்தவின் வருகையை முன்னிட்டு குறித்த விகாரையில் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்துள்ளனர்.

பொதுமக்களின் வரவேற்பின் காரணமாக கடும் மகிழ்ச்சியுடன் காணப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவும், நிகழ்வில் உற்சாகமான உரையொன்றையும் நிகழ்த்தியுள்ளார்.

அத்துடன் தனது முன்னைய அரசியல் வித்தைகளை ஞாபகப்படுத்தும் வகையில் பொதுமக்கள் மத்தியில் சென்று அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடல்களிலும் ஈடுபட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments