Latest News

January 12, 2016

மஹிந்த தேசிய தலைவர் -சுயாட்சிக் கோரிக்கையை கைவிட்ட சம்பந்தன்
by admin - 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஒத்துழைப்பு நாட்டிற்கு அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற விவாதத்தில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு கோரிக்கையொன்றை விடுக்கவுள்ளதாகவும், ஆனால் அவர் இந்த சபையில் தற்போது இல்லை எனவும் அவர் கூறினார்.

மஹிந்த ராஜபக்ஸ நாட்டின் தேசிய தலைவர்களில் ஒருவராகவே கருதப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அவர் தற்போது நாட்டிற்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனவும், அவரின் ஒத்துழைப்பு இந்த நாட்டு மக்களுக்கு தேவையானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ நாட்டின் நலனை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும் என இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

அத்துடன், மஹிந்த ராஜபக்ஸ இந்த விடயத்தில் சாதகமான முடிவை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சுயாட்சிக் கோரிக்கையை கைவிட்ட சம்பந்தன்

வடக்கு கிழக்கு தமிழர்கள் இனிமேல் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்க மாட்டார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

புதிய அரசியல் யாப்புக்கான விவாதத்தின் போது இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இரா.சம்பந்தன், அனைத்து சமூகங்களும் ஏற்கக்கூடிய தீர்வுவொன்றை நல்லாட்சி அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஸ்ரீலங்காவை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வுதான் சிறந்தது. இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அவரது அணியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சம்பந்தன் கேட்டுக் கொண்டார்.

நீண்ட உரையாற்றிய சம்பந்தன், புதிய அரசியல் யாப்புக்கான யோசனைகளில் வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கப்பட்டு சுயாட்சியுடன் கூடிய அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என தனது உரையில் வலியுறுத்தவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உள்ளக சுயநிர்ணய உரிமை என்றோ அல்லது தமிழர்களின் இறமையையும் வடக்கு கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசம் என்பதையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற எந்தவொரு கடுமையான வார்த்தைப் பிரயோகங்களையும் சம்பந்தன் தனது உரையில் வெளிப்படுத்தவில்லை என்றும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments