Latest News

January 18, 2016

பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டங்கள்
by admin - 0

உலகெங்கும் வாழும் தமிழர்களால் தமிழ் பாரம்பரியம் மாறாது தமிழர் கலை கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் முகமாக தமிழர் திருநாள் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

வீரத்தமிழர் முன்ணனி ,நாடுகடத்த தமிழீழ அரசாங்கம்,தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிரித்தானியா தமிழர் பேரவை மற்றும் இளையோர் அமைப்பு போன்ற தமிழர் அமைப்புக்களால் தமிழர் பாரம்பரிய முறைப்படி பிரித்தானியாவில் வெவ்வேறு இடங்களில் தமிழர் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் தமிழர் மரபு மாறாமல் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது .


அத்துடன் தமிழர்கள் எங்கு இருந்தாலும் தங்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை மறக்க மாட்டார்கள் என்பதற்கு உதராணமாக,லண்டன் வாழ் தமிழர்கள் தாரை தப்பட்டை அடித்து உற்சாகமாக பொங்கல் விழாவைக் கொண்டாடியுள்ளனர். இந்த விழாவில் பஞ்சாப் சிங் ஒருவர் பரதம் ஆட, இங்கிலாந்து இளம்பெண் வாடி ராசாத்தி பாடலுக்கு அபிநயம் பிடிக்க என்று அமர்க்களமாக கொண்டாட்டங்கள் நடந்துள்ளன.



























« PREV
NEXT »

No comments