Latest News

January 04, 2016

கேப்பாபிலவு மக்கள் தம்மை மீள் குடியமர்த்தக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.
by admin - 0



கேப்பாபிலவு மக்கள் தம்மை மீள் குடியமர்த்தக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.

கேப்பாபிலவில் இருந்து வெளியேற்றப்பட்ட அக்கிராம மக்கள் தம்மை தமது சொந்த கிராமத்தில் குடியேற்ற வேண்டும் என வலியுத்தி இன்று 4-1-2016 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கேப்பாபிலவில் பொது மக்களது வாழ்விடங்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள பாரிய ஸ்ரீலங்கா இராணுவ படைத்தளத்திற்கு முன்பாக காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி 11.30 மணி வரை  ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இராணுவத்தினரை வெளியேறுமாறு வலியுறுத்தியும், தமது சொந்த இடங்களில் மீள் குடியமர அனுமதிக்குமாறு வலியுறுத்தியும், மாதிரிக்கிராமம் தமக்கு வேண்டாம், அகதி வாழ்க்கை தமக்கு வேண்டாம், என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோசங்களை எழுப்பினர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு பிரதேச இணைப்பாளர் திருமதி விவேகானந்தன் இந்திராணி அவர்களது தலைமையில் இடம்பெற்ற மேற்படி போராட்டத்தில் கேப்பாபிலவு கிராம மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சி உறுப்பினர்களும் மேற்படி போராட்டத்தில் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கியிருந்தனர். 











ஊடக இணைப்பாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
« PREV
NEXT »

No comments