Latest News

January 19, 2016

யாழ்.பல்கலைக்கழகத்தின் 31ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா!
by Unknown - 0

யாழ். பல்கலைக்கழகத்தின் 31 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா இன்று யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் நடைபெற்றது.

இன்று காலை 8.30 மணிக்கு  ஆரம்பமாகிய இப்பட்டமளிப்பு விழாவில் யாழ்.பல்கலைக்கழக வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி.பத்மநாதன் மாணவர்களுக்கான பட்டங்களை வழங்கி வைத்தார்.

முதலாவது அமர்வில் 170 மாணவர்களுக்கும், முற்பகல் 10.45 மணிக்கு ஆரம்பமாகிய 2 ஆவது அமர்வில் 193 மாணவர்களுக்கும், பிற்பகல் 1.45 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 3ஆவது அமர்பில் 196 மாணவர்களுக்கும், 3.30 மணிக்கு ஆரம்பமாகும் 4ஆவது அமர்வில் 201 மாணவர்களுக்கான பட்டங்களும் வழங்கப்படுகின்றன 

இதேவேளை நாளை முற்பகல் 9 மணிக்கு ஆரம்பமாகும் 5 ஆவது அமர்வில் 181 மாணவர்களுக்கும், முற்பகல் 10.45 மணிக்கு ஆரம்பமாகும் 6 ஆவது அமர்வில் 193 மாணவர்களுக்கும், பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகும் 7 ஆவது அமர்வில் 188 மாணவர்களுக்கும், பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகும் 8ஆவது அமர்வில் 199 மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்படும்.



« PREV
NEXT »

No comments