Latest News

January 19, 2016

இந்தியாவில் சாதனை புரியும் யாழ் சிறுமி
by admin - 0

யாழ். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வி ஜெயக்குமார் தனுஜா தமிழகத்தில் நீச்சல் போட்டிகளில் பல சாதனைகளை புரிந்து வருகின்றார்.

தற்போது தமிழக அரசின் மாவட்ட மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பற்றி பல தடவைகள் முதலாம், இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். 

இந்த நிலையில் கடந்த 10ஆம் திகதி சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற மாநிலங்களுக்கிடையிலான நீச்சல் போட்டியில் தமிழகத்தில் இரண்டாம் இடத்தை பெற்று தேசிய அளவிலான தெரிவுச் சுற்றுக்கு தகுதி பெற்று யாழ் வல்வை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார். 

இதற்கமைய தங்கப்பதக்கத்திற்கான வாய்ப்பினை ஒரு வினாடியில் தவறவிட்ட தனுஜா 9 வயதுக்குட்பட்ட 50m buterfly நீச்சலினை 39 வினாடிகளில் நீந்தி சாதனை படைத்துள்ளார். 

இதற்கு முன்னரும் பல முறை நீச்சல் போட்டிகளில் பங்கு பற்றி தமிழக அரசின் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 


இதேவேளை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தெரிவாகியுள்ளவர்களுக்கிடையிலான தென்மண்டல (South Zone) அளவில் நடைபெறும் அடுத்த தகுதிச் சுற்றுப் போட்டி கேரள மாநிலம் திருவனந்த புரத்தில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments