மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது , மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டா காலங்காலமாக, நாகரிகமடைந்த ஒவ்வொரு சமுதாயத்திலுமுள்ள அறிவு மேதைகள் இந்தக் கேள்வியைக் குறித்து நிறையவே யோசித்திருக்கிறார்கள். ஆனால், மனித தத்துவங்களிலிருந்தும் விஞ்ஞான ஆராய்ச்சிகளிலிருந்தும் எண்ணிலடங்கா கோட்பாடுகளும் கட்டுக்கதைகளும்தான் மிஞ்சியிருக்கின்றன.
நமக்கு இரண்டு உடல்கள் உள்ளன. நமக்குத் தெரிந்த இந்த பூத உடல் உன்று. மற்றொன்று கண்ணுக்குப் புலப்படாத சூட்சம உடல் ஆகும். நாம் இறந்த பின் நாம் வேறு ஏதோ உலகுக்குப் பயணிக்கிறோம். நமது நன்மை, தீமைகளுக்கு ஏற்ப சொர்க்கமோ நரகமோ செல்கிறோம் எனவே மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை உண்டு என்பது நம்ப்பிக்கை
மரணம்தான் இறுதியானது. மறு பிறவி என்பதோ சொர்க்கம்-நரகம் என்பது கிடையாது என்று பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதாவது:-
மூளை உயிருடன் இருக்கும் வரைதான் எல்லாமே. அது செயலிழந்து விட்டால் அனைத்தும் முடிந்து போய் விடும். அதன் பிறகு எதுவுமே கிடையாது.
நான் கடந்த 49 வருடமாக மரணத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். எனக்கு மரண பயம் சுத்தமாக இல்லை. ஆனால் மரணிக்க நான் அவசரப்படவில்லை.
நான் நிறைய சாதிக்க ஆசைப்படுகிறேன். பல விஷயங்களை நான் இன்னும் கற்றுக் கொள்ளவே இல்லை. அதையெல்லாம் செய்ய வேண்டும். மூளையும ஒரு கம்ப்யூட்டர் போலத்தான். எப்படி கம்ப்யூட்டரில் உள்ள சாதனங்கள் செயலிழந்தால் அது செயலிழந்து போகுமோ அதுபோலத்தான் மூளையும்.மூளை செயலிழந்து விட்டால் அவ்வளவுதான். அனைத்தும் முடிந்து விடும். அதன் பிறகு எதுவுமே இல்லை. மரணம்தான் இறுதியானது. சொர்க்கமும் கிடையாது, நரகமும் கிடையாது, மறுபிறவியும் கிடையாது.
மரணத்திற்குப் பின் வாழ்க்கை இல்லை மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை என்பது கற்பனையானது. கட்டுக்கதை அது. மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள் அவை என கூறி உள்ளார்.
No comments
Post a Comment