தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
மாரடைப்பு காரணமாக அதிகாலை 3 மணியளவில் சிறி ஜெயவர்த்தன புர வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
தற்போது செல்வம் அடைக்கலநாதனின் உடல் நிலை தேறி வருவதாகவும், அவருக்கு தொடர்ச்சியாக அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்து சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என சிறி ஜெயவர்த்தன புர வைத்தியசாலை வைத்தியர்கள் தொரிவித்துள்ளதாகவும் எஸ்.வினோ நோகராதலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment