தமிழீழ கோரிக்கையை தொடர்ந்தும் வலியுறுத்துவது என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
உருத்திரகுமாரனின் தலைமையிலான நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிர்வாகிகள் அண்மையில் சந்தித்து 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்பில் கலந்தாலோசித்தனர்.
இதன்போது ஹைபிரைட் நீதிமன்றம் அதனூடாக நீதியை நிலை நிறுத்துவதற்கான ஏதுகள் குறித்து கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான சட்ட மற்றும் ஏனைய மூலவளங்களை சேகரிப்பது என்றும் அது தொடர்பான விசாரணைக்கு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இதேவேளை உலகில் உள்ள தமிழ் அமைப்புக்கள் யாவும் ஒரு குரலில் கோரிக்கையை முன்வைத்து சர்வதேச கவனத்தை ஈர்க்கவேண்டும் என்று இந்த அமர்வின் போது இணங்கப்பட்டது.
இதற்கிடையில் தமிழீழத்துக்கான புதிய நாணயத்தை அச்சிடுவது தொடர்பாக ஆய்வுகளை நடத்துவதற்கும் இதன்போது கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
No comments
Post a Comment