Latest News

December 04, 2015

செம்பரப்பாக்கம் ஏரி உடையவில்லை: பீதியடைய வேண்டாம்
by admin - 0

சென்னை: செம்பரப்பாக்கம் ஏரி உடையவில்லை என போலீசார் கூறியுள்ளனர். பீதியடைய வேண்டாம் என பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்னர்.

செம்பரப்பாக்கம் ஏரி உடைந்ததாக சிலர் வதந்தியை கிளப்பினர். இதனால் பொது மக்கள் பீதியில் உறைந்தனர். வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்ல துவங்கினர். ஒரிடத்தில், தனது குழந்தையை காணவில்லை என ஒரு பெண் அலறியபடி சாலையில் ஓடியதை கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒரு பெண் வலிப்பு நோய் காரணமாக சாலையில் மயக்கமடைந்தார்.

இந்நிலையில், போலீசார், செம்பரப்பாக்கம் ஏரி உடைந்ததாக கிளம்பிய வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என கூறியுள்ளனர். கரையோரம் வசிக்கும் மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தியுள்ளனர். சூளிப்பள்ளம், சைதாப்பேட்டை உள்ளிட்ட கரையோரப்பகுதி மக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இரும்புலியூர் ஏரி நிரம்பியது: இந்நிலையில், இரும்புலியூர் ஏரி நிரம்பியதை தொடர்ந்து முடிச்சூர், கிருஷ்ணாநகர், லட்சுமிபுரம் உள்ளிட்ட தாம்பரம் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments