தமிழ் நாட்டுத் தமிழா.!
இன்னும் எவ்வளவு காலத்துக்கு சோரம் போகப் போகின்றாய்.??
ஈழத்து துரோணர்..!!!
தமிழ்நாட்டின் தலைநகர் உட்பட பல நகர்கள் மழை நீரில் தத்தளிக்கின்றது. தமிழர் நீரில் மிதந்து சென்று தங்கள் அன்றாடக் கடமைகளை செய்து வருகின்றனர். இதற்கு யார் காரணம்?? சமூக ஆர்வலர்கள், தமிழ் நாட்டை ஆண்ட இரண்டு திராவிட கட்சிகளையும் நோக்கி கைகளை காட்டுகின்றார்கள்.
ஆனாலும் அடிமட்ட மக்களில் பலர், இயற்கையின் அழிவு இதுவெனவும், இதற்கு ஐயா கருணாநிதியோ அல்லது அம்மா ஜெயலலிதாவோ என்ன செய்ய முடியும் என்று அப்பாவியாக கூறும் போது இவர்களின் அறியாமையே வேதனையை உண்டாக்குகின்றது.
இன்று சிங்கப்பூர் மலேசிய உட்பட பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்த நாடுகளில் இதே மழை பெய்திருந்தால் அடுத்த நிமிடமே மழை நீரை கண்களால் காணமுடியாது. அதற்கு காரணம் சரியான திட்டமிடலுடன் கூடிய வாய்க்கால்,வடிகால் அமைப்புகள். அத்தோடு தேச நலனில் அக்கறை கொண்ட அந்த இனத்தின் பிள்ளைகள் அவர்கள் நாட்டை ஆழ்வதே முக்கிய காரணம்.
தமிழ்நாட்டை யார் ஆழ்கின்றார்கள்?? அவர்களின் நோக்கம் என்ன ?? பணம், பணம், பணம்?? இதை யாராவது மறுக்க முடியுமா ?? அந்த இரு கட்சிகளில் இன்று இருந்து கொண்டு அவர்களுக்காக வக்காளத்து வாங்கும் ஈனத்தமிழனால் கூட மறுக்க முடியாது. பின்னர் ஏன் அவர்களுக்கு பின்னால் இவர்கள் செல்கின்றார்கள்?? அங்கும் குறுகிய வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணமே!!
ஆக தமிழ் நாட்டின் இன்றைய நிலைக்கு காரணம் திராவிட கட்சிகளும், அற்பசலுகைகலுக்காக சோரம் போன தமிழர்களே காரணம். அதன் பலனை இன்று மக்கள் அனுபவிக்கின்றார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால் வாய்க்கால் வடியமைப்பை உலகுக்கு அறிமுகப் படுத்திய தமிழர் நகரங்கள் தான், இன்று அந்த வசதிகள் அற்றுப் போய் நீரில் மிதக்கின்றது.
தமிழா நீ விழிக்க வேண்டிய நேரமிது. திராவிட கட்சிகளை உதறித்தள்ளி தமிழர்களை ஆழவையுங்கள். திரம்பவும் அதே திராவிட கட்சிகளுக்கு முண்டு கொடுத்து அற்ப சலுகைகளுக்காக உங்கள் பிள்ளைகளுக்கு, இந்த துன்பத்தை விதைக்காதீர்கள். இதற்கு பின்னும் தமிழ்நாட்டு தமிழ் மக்கள் திருந்தா விட்டால் உங்கள் அழிவை யாராலும் தடுக்க முடியாது.
அடுத்த முறை தேர்தல் வரும் போது மிக்சி, கிரைண்டர், TV, போன்றவற்றுக்கு ஆசைப்பட்டு உங்கள் எதிர்கால சந்ததிகளை குழியில் தள்ளாதீர்கள். ஒன்றை மட்டும் யோசியுங்கள் இந்த இலவசங்களுக்கு செலவிடுவதற்கு பல ஆயிரம் கோடி பணம் எங்கிருந்து வந்தது ? இதை அவர்கள் உங்களுக்கு தந்து விட்டு அவர்கள் உங்களிடமிருந்து, உங்களுக்கே தெரியாமல் எடுக்கும் பணம் அதை விட பல்லாயிரம் மடங்கு.
தயவு செய்து திருந்து தமிழா.! ஒரு மாற்றத்தை கொண்டு வாருங்கள் தமிழ் நாட்டில். அப்படி முடியாதென்று நினைப்பவர்கள் மிக்சி, கிரைண்டர், TVக்கு பதிலாக வீட்டுக்கொரு படகு ஒன்றை கேட்டு வாங்குங்கள் பயணம் செய்ய இலகுவாய் இருக்கும்..!!!
சினத்துடன் துரோணர்..!!!
No comments
Post a Comment