Latest News

December 01, 2015

புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களின் தடை நீக்கம் தேசியப் பாதுகாப்பை பாதிக்கும் - தினேஸ் குணவர்தன
by admin - 0

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களின் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் தேசியப் பாதுகாப்பை பாதிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்தள்ளார்.


தடை நீக்கம் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாது என்பதற்கு அரசாங்கத் தரப்பில் வழங்கப்படக்கூடிய உத்தரவாதம் என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


குறித்த அமைப்;புக்கள் மீதான தடை நீக்கம் நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மக்கள் துரோக, அரச விரோத அமைப்புக்கள் மீதான தடை எதற்காக நீக்கப்பட்டது என்பதனை தாம் கேட்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.


வெளிநாடுகளில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் நபர்கள் சுதந்திரமாக தமது செயற்பாடுகளை மேற்கொள்ள இந்த தடை நீக்கம் வழியமைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.


ஆபத்தான அமைப்புக்களை ஐக்கிய தேசியக்கட்சி ஏன் தடை நீக்கியது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


பாதுகாப்பு முகாம்களுக்குள் வெளிநபர்கள் பிரவேசிக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட்டதன் மூலம் விமான, கடற்படைச் சட்டஙக்ள் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


நாடு இன்று மிகவும் ஆபத்தான நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.


பயங்கரவாதிகளுடன் பேணப்பட்ட இரகசிய ஒப்பந்தமா தடை நீக்கத்திற்காக காரணம் என தினேஸ் குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.
« PREV
NEXT »

No comments