சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா, முதல் முறையாக நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மத்திய தரைக்கடலில் நீர்மூழ்கி கப்பளில் இருந்து சிரியாவின் ரக்கா பகுதி மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில், ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆயுத கிடங்கு மற்றும் கச்சா எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் என்பன அழிக்கப்பட்டுள்ளன.
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நேற்று, சிரியா மீதான தாக்குதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதன்போது, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் சேர்ஜி, ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட தகவலை தெரிவித்தார். தற்பொழுது அதன் வீடியோ கட்சியையும் ரஷ்யா வெளியிட்டுள்ளது.
மேலும் நீர்மூழ்கி கப்பல்களை பயன்படுத்தப்போவது பற்றி 3 நாட்களுக்கு முன்பாகவே அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடம் தெரிவித்துவிட்டதாக பாதுகாப்பு அமைச்சர் சேர்ஜி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
No comments
Post a Comment