சிங்கப்பூரில் சிகிச்சையை நிறைவு செய்து கொண்டு, மன்னார் மாறைமவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் இன்று பிற்பகல் மன்னாரை வந்தடைந்தார்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிங்கபூரில் மேலதிக சிகிச்சை பெற்று வந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை இன்று புதன்கிழமை (09) நாடு திரும்பியுள்ளார்.
பண்டாரநாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்த ஆயர். அங்கிருந்து விசேட உலங்குவாணுர்தி மூலம், ஏ32 வீதியில் அமைந்தள்ள மன்னார் தள்ளாடி விமான தளத்தை வந்தடைந்தார்.
ஆயருடன் ஆயரின் செயலாளர் அருட்தந்தை ஏ.முரளிதரன் மற்றும் அருட்தந்தை எமில் எழில்ராஜ் ஆகியேரும் சிங்கபூரில் இருந்து வருகை தந்திருனர்.
தள்ளாடி விமான தளத்திற்கு வந்தடைந்த ஆயரை மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அன்ரனி விக்ரடர் சோசை ,மற்றும் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள், சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் ஆகியோர் வரவேற்றனர்.
தள்ளாடி விமான தளத்தில் இருந்து ஆயர் இராயப்பு ஜோசப் அம்புலன்ஸ் வண்டி மூலம் ஆயர் மன்னார் இல்லத்தை சென்றடைந்தார்.
No comments
Post a Comment