யாழ்ப்பாணம், மன்னார் வீதியில் பூநகரி மண்டைக்கல்லாறு பகுதியில் ஏ32 வீதியை குறுக்கெடுத்து வெள்ளம் பாய்வதால் அவ்வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது,
இப்பாதையால் யாழ்ப்பாணம் மற்றும் பூநகரி வடக்கு பகுதியிலிருந்து பல்வேறு தேவைக்ள நிமிர்த்தம் முழங்காவில் மற்றும் மன்னார் பிரதேசத்திற்கும் அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கும் போக்குவரத்துச் பாதிக்கப்பட்ட நிலையில் மண்டக்கல்லாறு பகுதியில் படகு மூலம் போக்கு வரத்துக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் சென்று வருகின்றனர் பூநகரி கடற்றொழிலாளர் சங்கத்தின் ஒரு படகும், இரானுவத்தின் ஒரு படகும் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
No comments
Post a Comment