Latest News

November 10, 2015

கிறிஸ்மஸ் தீவு அமைதியீனம் முடிவுக்கு வந்தது!
by Unknown - 0

இந்து சமுத்திரத் தீவான கிறிஸ்மஸ் தீவுகளில் போலிஸாருக்கும், தஞ்சம் கோரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட அமைதியீனம் இரு நாட்களுக்கு பின்னர் முடிவுக்கு வந்துள்ளதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறியுள்ளது.

அந்த தடுப்பு முகாமில் ஏற்பட்ட பதற்ற நிலையை கையாள அதிகாரிகள் இரு விமானங்களில் போலிஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை அங்கு கொண்டு குவித்துள்ளனர்.

தடுப்பு முகாமில் இருந்து தப்பிச் சென்ற ஒரு இரானிய நபர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த கலவரம் ஏற்பட்டது.

ஆஸ்திரேலியாவின் மனித உரிமை மீறல்கள் குறித்த பதிவுகளை ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆராய்ந்துகொண்டிருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தஞ்சம் கோரி வருவோரை கட்டாயமாக தடுப்பு முகாமில் வைக்கும் ஆஸ்திரேலிய கொள்கை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
« PREV
NEXT »

No comments