பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரன் எதிர்வரும் 2016ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோல்டாவில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டின்போது, இலங்கை ஜனாதிபதியை சந்தித்த பிரித்தானிய பிரதமர் இதுகுறித்து தெரிவித்ததாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விஜயத்தின்போது, யுத்தக் குற்றம் தொடர்பில் இலங்கையில் உருவாக்கப்படும் உள்ளக விசாரணை பொறிமுறையின் நம்பகத்தன்மை குறித்து ஆராய்வார் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மோல்டாவில் நடைபெற்ற இருநாட்டு தலைவர்களுக்ககம் இடையிலான பேச்சுவார்த்தையின்போது, இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு உதவியளிக்கும் வகையில் பிரித்தானியா 980 கோடி ரூபா நிதியை வழங்க இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments
Post a Comment