Latest News

November 08, 2015

சிறிலங்காவின் அமைதிக்கும் சமாதானத்துக்குமான மாநாடு : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள் பங்கெடுப்பு !
by Unknown - 0

தென்னாபிரிக்காவின் டப்ளின் நகரில் இடம்பெற்றிருந்த சிறிலங்காவின் அமைதிக்கும் சமாதானத்துக்குமான மாநாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள் பங்கெடுத்துள்ளனர்.

நவம்பர் 6 7 ஆகிய நாட்கள் இடம்பெற்றிருந்த இந்த மாநாட்டினை தென்னாபிரக்க அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் Solidarity Group for Peace and Justice in Sri Lanka (SGPJ) அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

ஐ.நா மனித உரிமைச்சபையின் முன்னாள் ஆணையாளர் நவிப்பிள்ளை அம்மையார் அவர்கள் பங்கெடுத்திருந்த இந்த இரு நாள் மாநாட்டில், தமிழீழத் தாயகம், புலம், தமிழகம் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு அமைப்புகளும், சிவில் சமூக பிரதிநிதிகளும் பங்கெடுத்துள்ளனர். ( North Provincial Council; Tamil Civil Society Forum; Transnational Government of Tamil Eelam (TGTE); British Tamil Forum(BTF); International Council of Eelam Tamils (15 Countries) (ICET); Thamizhaga Vazhvurimai Katchi (TVK); World Thamil Organization (WTO); and the United States Tamil Political Action Council (USTPAC). DMK The conference also received the support of the Dravida Munnetra Kazhagam (DMK) and the Naam Thamizhar Katchi in Tamil Nadu; and the International Movement for Tamil Culture (Africa – South Africa). The South African High Commissioner to Sri Lanka, Mr Geoff Doidge, )

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் மற்றும் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்களுக்கான துணை அமைச்சர் சியான் சின்னராசா ஆகியோர் பங்கெடுத்திருந்ததாக நா. தமிழீழ அரசாங்கத்தின் ஊடக அமைச்சின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாள் மாநாட்டில் ஈழத்தமிழ் மக்களுக்கான பரிகார நீதிக்கும், நிலையான அரசியற் தீர்வுக்கும் மேற்கொள்ள வேண்டிய செயற்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதோடு, டப்ளின் தீர்மானம் என்ற அடையாளத்தோடு அமர்வின் நிறைவில் தீர்மானமொன்றும் நிறைவேற்றப்பட்டதாக, தென்னாபிரிக்காவில் இருந்து ஊடகவியலாளர் சபரி கவுண்டர் தனது செய்திக்குறிப்பில்  தெரிவித்துள்ளார்.




« PREV
NEXT »

No comments