மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
முன்னதாக கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை 1 விக்கெட்டு வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் அதே மைதானத்தில் 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்து ஆடியது. இதன்படி ஜான்சன் சார்லெஸ் மற்றும் ஃப்லெக்சர் களமிறங்கினர்.
ஃப்லெக்சர் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமலும், அடுத்த வந்த பிளாக்வுட் மற்றும் டெரன் பிராவோ ஆகியோர் தலா 9 மற்றும் 21 ஆட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் சார்லெசுடன் சாமுவேல்ஸ் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடினர். இடையில் மழை பெய்ததால் ஆட்டம் 38 ஓவராக குறைக்கப்பட்டது.
இதனிடையே சிறப்பாக ஆடிய சார்லெஸ் 83 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அப்போது மேற்கிந்திய தீவுகள் 139 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
அடுத்த வந்த வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் அந்த அணி 214 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
சாமுவேல்ஸ் 63 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இலங்கை தரப்பில் மலிங்கா மற்றும் சிரிவர்த்தனா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து இலங்கை அணிக்கு 225 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
குஷல் பெரெரா மற்றும் தில்சான் துவக்க வீரர்களாக களமிறங்கினர். தில்சான் 17 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து பெரேராவுடன் திரிமன்னே ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக ஆடினர். இதனால் இலங்கை அணியின் ஓட்டம் சீரான வேகத்தில் அதிகரித்தது.
இதனிடை சிறப்பாக ஆடிய பெரேரா 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 99 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
பின்னர் திருமன்னேவுடன் சந்திமால் இணைந்தார். இருவரின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கை அணி 36.3 ஓவர்களில் 225 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது
No comments
Post a Comment