பிரெஞ்ச் தலைநகர் பாரிஸிஸ் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடூரமான தாக்குதல்களுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க பிரான்ஸ் நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், அதற்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
துருக்கியில் இன்று தொடங்கிய ஜி-20 உச்சிமாநாட்டில் உரையாற்றும் போதே பராக் ஒபாமா இதைத் தெரிவித்தார்.
திரிபுபடுத்தப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில், மனிதர்களை கொலை செய்வது என்பது, நாகரீக உலகின் மீது நடத்தப்படும் ஒரு தாக்குதல் என, துருக்கிய அதிபர் எர்துவானுடன் இணைந்து உரையாற்றும் போதே ஒபாமா கூறினார்.
இஸ்லாமிய அரசு என்று தம்மை கூறிக் கொள்ளும் குழுவை எதிர்த்து போராடுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, தான் அமெரிக்க அதிபருடன் விவாதித்துள்ளதாக எர்துவான் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்துக்கு எதிராக உலகத் தலைவர்கள் உறுதியான, கடுமையான செய்தியை வெளிப்படுத்த வேண்டும் எனவும் துருக்கிய அதிபர் கோரியுள்ளார்.
சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்தும் தாங்கள் விவாதித்ததாக ஒபாமா தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபிய மன்னர் சல்மான் அவர்களுடன் ஒபாமா இன்று பேச்சுக்ளை நடத்துகிறார்.
No comments
Post a Comment