இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் வடமாகாணம் முழுவதும் இன்று பூரண கர்த்தால் அனுட்டிக்கப்படுகின்றது.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் அரசியல் கைதிகள் மீண்டும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இந்த கர்த்தால் மேற்கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆகியனவும் பொது அமைப்புக்களும் கோரியதற்கிணங்க இந்த கர்த்தால் மேற்கொள்ளப்படுகின்றது.
இதனையடுத்து யாழ்.மாவட்டத்தில் பல்கலைக்கழகம், பாடசாலைகள், மற்றும் வங்கிகள் உள்ளடங்கலாக அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளது.
மேலும் வன்முறைகளை தடுப்பதற்காக பொலிஸார் தொடர் றோந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் மேற்கொள்ளப்படும் கர்த்தாலுக்கு இணையாக இன்றைய தினம் பேருந்து போக்குவரத்து மற்றும் முச்சக்கர வண்டிகள் கூட நிறுத்தப்பட்ட நிலையில் யாழ்.குடாநாடு முழுமையாக முடக்கப்பட்டு கர்த்தால் மேற்கொள்ளப்படுகின்றது.
No comments
Post a Comment