Latest News

November 28, 2015

Wi-Fi தொழில்நுட்பத்தை விட 100 மடங்கு வேகம் கொண்ட Li-Fi
by Unknown - 0

இணையத்தள இணைப்பை வயர் இல்லாமல் பயன்படுத்துவதற்காக ‘WiFi’ என்ற தொழில்நுட்பம் உள்ளது.

இதை பயன்படுத்தி குறிப்பிட்ட தூரம் வரை வயர் இணைப்பு இல்லாமல் கணணி, செல்போன், மடிக்கணணி, லேப்லெட் போன்ற சாதனங்களில் இணையத்தள வசதிகளை பெற முடியும்.

ஆனாலும் ‘WiFi’ மூலம் தகவல்களை பதிவிறக்கம் செய்வதற்கு கஷ்டமாக இருக்கும்.

தற்போது WiFi வை விட 100 மடங்கு வேகம் கொண்ட தொழில்நுட்பத்தை எஸ்டோனியா நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இதற்கு ‘LiFi’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

WiFi இல் 1 ஜி.பி. தகவல்களை பதிவிறக்கம் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகுமோ அதை விட 100 இல் 1 மடங்குதான் LiFi நேரம் எடுத்துக் கொள்கிறது.

தகவல் தொழில் நுட்பத்தில் LiFi புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

« PREV
NEXT »

No comments