Latest News

November 06, 2015

கோத்தபாய கைது செய்யப்படலாம்?
by Unknown - 0

அவன்கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆயுத களஞ்சியசாலை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பில் இடம் பெற்றது. 

இதில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன இவ்வாறு கூறியுள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையினை வைத்து அவரை கைது செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை தொடர்பில் அரசாங்கத்துக்குள் ஏற்பட்டிருக்கும் கருத்து முரண்பாடு தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன் இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அமைச்சர்கள் பலரும் தமது கருத்துக்களை கூறியிருப்பதாக அவர் சுட்டிக்காட்யுள்ளார்.

இதேவேளை கடந்த அமைச்சரவை கூட்டத் தொடரின் போது இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததாகவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments