இன்றைய தினம்(11) கிளிநொச்சிக்கு வருகைதந்த கானமல் போனோர் தொடர்பில் ஆராயும் ஜநா குழுவினரின் விசாரணைக்கு கானமல் போனவர்களின் உறவினர்களை ஏற்பாடு செய்த மனித உரிமைகள், அபிவிருத்திக்குமான நிலையத்தின் கிளிநொச்சி செயற்பாட்டாளர்களுக்கு இலங்கை புலனாய்வுத்துறையினர் தொலைபேசியில் நெருக்கடிகளை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த செயற்பாட்டாளர்களுக்கு புதன் இரவு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய புலனாய்வாளர்கள் நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?,யார் நாளை வருகின்றார்கள்? அதற்கான உங்களின் ஏற்பாடுகள் என்ன? வருகின்றவர்கள் என்ன நடவடிக்கையில் ஈடுப்படப் போகின்றார்கள்? போன்ற பல கேள்விகளை கேட்டதாகவும், இப்படி பலர் அடிக்கடி தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு தங்களின் செயற்பாடுகளை வலுவிலக்கச் செய்யும் வகையிலும், சாட்சியமளிக்க செல்கின்றவர்களின் உளவியலை பாதிக்கும் வகையிலும் தொலைபேசியில் கேள்விகளை கேட்;டதாகவும் தெரிவிக்கின்றனர்.
ஆனால் தாங்கள் மேற்படி ஜநா குழுவினர் இலங்கை அரசின் அனுமதியுடன் நாட்டுக்குள் வருகைதந்த உயர்மட்ட குழுவினர் எனவும் அவர்கள் என்ன செய்யப் போகின்றர்கள் என்பதனை அரசிடமே கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என்று பதிலளித்ததாகவும் குறிப்பிட்டனர்.
No comments
Post a Comment