Latest News

November 18, 2015

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி லண்டனில் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம்.
by அகலினியன் - 0

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி லண்டனில் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம்.

இலங்கைச் சிறைச்சாலையில் பல ஆண்டுகளாக போர் கைதிகளாகவும், அரசியல்  கைதிகளாகவும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற எமது  உறவுகளை இலங்கை  அரசு உடனடியாக விடுவிக்கக் கோரி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டமானது இலங்கை அரசாங்கத்தின் நிபந்தனைக்கு அமைய எமது உறவுகளால் 15.12.2015 வரை தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ள  காரணத்தால் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் அமெரிக்காவில் ஐநா அலுவலகத்திற்கு  முன்பாக நாளை (18.11.2015) 12 மணிக்கு ஆரம்பமாகி முடிவடையும் அதே நேரம் பிரித்தானியாவில் திங்கட் கிழமை ஆரம்பமாகிய உண்ணாவிரதப் போராட்டம் நாளை மாலை 07:00 மணிக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள எமது உறவுகளின் போராட்டம் தொடரும்    பட்சத்தில் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் எமது போராட்டம் தொடரும் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்

- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்







« PREV
NEXT »

No comments