ஐரோப்பாவின் பல பகுதிகளில் நிலவும் அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக இரண்டாவது நாளாக பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பனிமூட்டம் காரணமாக, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்களில் பத்து சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேபோல பாரிஸ், டூசல்டார்ஃப், ஆம்ஸ்டர்டாம் மற்றும் பிரசல்ஸ் விமான நிலையங்களிலும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டடுள்ளன.
பல விமான நிலையங்களில் விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகையும் கடுமையாக தாமதமடைந்துள்ளன.
விமான போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் காரணமாகவும் தமது சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பல விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
No comments
Post a Comment