மட்டக்களப்பு சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்து வந்த தமிழ் அரசியல் கைதிகள் இன்று காலை 8.30 மணியளவில் தமது உண்ணாவிரதத்தினை முடித்துக் கொண்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிரீநேசன், மற்றும் சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாளேந்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளருமான கே.துரைராஜசிங்கம் ஆகியோர் இன்று காலை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்று அங்கு உண்ணாவிரதமிருந்த தமிழர் அரசியல் கைதிகள் 10 பேருக்கு இளநீர் வழங்கி உண்ணாவிரதத்தினை முடித்து வைத்தனர்.
இதன்போது நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக நடத்தப்பட்ட அரசாங்க உயர் மட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளுக்கான பிணை மற்றும் சில அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளிப்பது போன்ற விடயங்களை இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் அரசியல் கைதிகளிடம் எடுத்துக் கூறினர்.
இதையடுத்து இவர்களின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. கடந்த பத்து தினங்களாக இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் 11 தமிழ் அரசியல் கைதிகள் இருந்த நிலையில் ஒருவர் அன்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment