Latest News

November 04, 2015

துருக்கியில் ஏவுகணைகளை குவிக்கும் அமெரிக்கா: ரஷ்யா மீது தாக்குதல் நடத்த திட்டம்?
by Unknown - 0

துருக்கியில் அமெரிக்கா அதிநவீன ஏவுகணைகளை குவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யாவும் தாக்குதலில் குதித்தது.

ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது மூர்க்கமாக தாக்குதல் நடத்திவருவதுடன் அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்திவருகிறது.

மேலும் அமெரிக்க நிலைகளுக்கு அருகிலேயே ரஷ்யா தாக்குதல் நடத்துவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அமெரிக்கா கடும் அதிர்ப்தி அடைந்துள்ளது. இதனிடையே அமெரிக்கா அதிநவீன ஏவுகணைகள் தாங்கிய எப்.15சி போர் விமானங்களை அதிக அளவில் துருக்கியில் குவித்துள்ளது.

எதிர்நாட்டு ஏவுகணைகளை நடுவானிலேயே இடைமறித்து தாக்கும் ஆற்றல் உடைய இந்த ஏவுகணைகளை சிரிய எல்லையில் உள்ள துருக்கி விமானப்படை தளத்தில் அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிநவீன இந்த போர் ஆயுதங்களை தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா பயன்படுத்த வாய்ப்பில்லை என்பதால் ரஷ்யாவின் தாக்குலை சீர்குலைக்கவே குவிக்கப்பட்டுள்ளதாக நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments