மத்திய தரைக்கடலில் குடியேறிகளை ஏற்றிவரும் படகுகளில் தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் ஆறு போர் கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆட்கடத்தல் பிரச்சனையை சமாளிக்கவும் கடலில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டுவரும் "சோபியா நடவடிக்கை"யின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டில் இதுவரை ஒரு லட்சத்து முப்பதாயிரத்துக்கும் அதிகமான குடியேறிகள் சிரியாவிலிருந்து வெளியேறி, லிபியா வழியாக கடலைக் கடந்து இத்தாலியை வந்தடைந்துள்ளனர்.
எந்த வித அச்சுறுத்தலையும் சமாளிக்க தாம் தயாராக இருப்பதாக இந்த சிறப்பு நடவடிக்கையின் துணைத் தளபதி ரியர் அட்மிரல் ஹெர்வ் ப்லஷான் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
ஆட்கடத்தல்காரர்களை லிபிய கடல்பரப்பில் துரத்திப் படிக்க ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது. ஆனால் லிபியாவிடமிருந்தும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடமிருந்தும் அதற்கான அனுமதி இன்னமும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கிடைக்கவில்லை.
No comments
Post a Comment