தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவு மகளிர் பொறுப்பாளர் தமிழினி அவர்களின் கண்ணீர் வணக்க நிகழ்வு லண்டனில் இன்று (25-10-2015) மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
அகவணக்கத்தை தொடர்ந்து பொதுமக்கள் தமிழினியின் திருவுருவப்படத்திற்கு மலர் வணக்கம் செலுத்தினர்.
"தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் அரயல்துறை பொறுப்பாளர் தமிழினியின் வருகையின் பின்பே தமிழீழப்பெண்களின் போராட்ட எழுச்சி வேகம் பெற்றது. தமிழ்த்தேசியத்தை அவர் ஆழமாக நேசித்ததின் வெளிப்பாடே இன்று எல்லோர் அவர் மனங்களிலும் இருக்கின்றார்.
தமிழினியின் மரணம் எமது இலட்சிய வழியில் இருந்து தடம் மாறுபவர்களுக்கு ஒரு செய்தியை சொல்லியிருக்கிறது, தமிழீழ தேசத்தில் எந்த அச்சமும் இல்லாமல் இறுதி நிகழ்வில் திரண்ட ஆயிரக்கணக்கானவர்களைப் பார்க்கும் போது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எம் மாசற்ற மாவீரர்களை மக்களின் மனங்களில் இருந்து யாராலும் அகற்றிவிட முடியாது.
No comments
Post a Comment