அவுஸ்ரேலியாவின் மோர்லன்ட் நகர முதல்வராக, இலங்கையில் பிறந்த சமந்தா ரத்தினம் என்ற தமிழ்ப் பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்ரேலியாவின் மோர்லன்ட் நகர மன்றத்தின், தெற்கு வட்டாரத்தின் உறுப்பினரான சமந்தா ரத்தினம், கிறீன் கட்சியின் சார்பில் தெரிவானவர்.
இந்த நகர முதல்வர் பதவிக்கு நடந்த வாக்கெடுப்பில், 6-5 என்ற வாக்குகளின் அடிப்படையில், தொழிலாளர் கட்சியின் வேட்பாளரை, தோற்கடித்து, சமந்தா ரத்தினம் வெற்றி பெற்றார்.
அவுஸ்ரேலிய தொழிலாளர் கட்சியின் கோட்டையான இந்த நகர மன்றத்தில், கிறீன் கட்சி முதல் முறையாக நகரமுதல்வர் பதவியைப் பெற்றுள்ளது.
இதற்கு முன்னர் இரண்டு ஆண்டுகள் நகர முதல்வர் பதவிக்கு நடந்த தேர்தலின் போது, சமந்தா ரத்தினம் தோல்வியடைந்திருந்தார்.
சிறிலங்காவில் பிறந்த இவர், வன்முறைகளால் 1987இல் அங்கிருந்து வெளியேறி, ஐரோப்பா, கனடாவில் வசித்த பின்னர், 1989ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் குடியேறினார்.
தனக்கு ஆறு வயதாக இருந்த போது, 1983ஆம் ஆண்டு கொழும்பில் இனக்கலவரம் ஏற்பட்டதாகவும், அப்போது சிங்களவர்களால் தமிழர்களின் வீடுகள் எரிக்கப்பட்டு தமது குடும்பத்தினர் உள்ளிட்டோர் அகதிகளாகியதாகவும் சமந்தா இரத்தினம் நினைவுகூர்ந்துள்ளார்.
“வீதிகள் எரிந்தன. பெயரிவர்கள் அழுததை முதல்முறையாக பார்த்தேன்” என்று அவர் அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார்.
No comments
Post a Comment