சுவிசில் சிறப்பாக நினைவு கூரப்படட் தமிழினி அவர்களின் வணக்க நிகழ்வு!
தமிழீழ விடுதலைக்கும், தமிழ் மக்களின் கௌரவமான வாழ்விற்காகவும் தன்னை இறுதிவரை அர்ப்பணித்து தாயகத்தில் சுகவீனம் காரணமாக சாவினை அரவணைத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் திருமதி தமிழினி அவர்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 26.10.2015 திங்கடக் கிழமை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சுவிஸ் பணிமனையில் கனத்த இதயங்களுடன் கடைப்பிடிகக்ப்பட்டது.
பெண்கள் விழிப்புற்று எழுச்சி கொண்டு தமது சொந்த விடுதலைக்காகவும், தேச விடிவிற்காகவும் போராட முனவ்ரும் போதுதான் அது தேசிய விடுதலைப் போராட்டமாக முழுமையடையும் என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக தன்னை வீரமிக்கபன்முக ஆளுமைமிக்க போராளியாக வளர்த்துக்கொண்ட தமிழினி அவர்கள் இறுதிவரை தாயகம் நோக்கிய விடயங்களில் செயற்பட்டு வந்தவர்.
சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழினி அவர்களுக்குரிய ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவித்தலுடன் அகவணக்கம், மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்வில் திருமதி தமிழினி அவர்களினது நினைவுகள் சுமந்து கவிதைகள், நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டிருந்ததுடன் நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து இலக்கு வெல்லும் வரை மாவீரர்களின் கனவோடு தமிழீழத் தேசியத் தலைவர் வழியில் எமது பயணம் தொடரும் என்ற உறுதியோடு தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.
சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பு
No comments
Post a Comment