சுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர்.
சுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நிறைவுபெற்றது இந்த தேர்தலில் ஈழத்தமிழர்கள் பங்குபெற்றினர் குறிப்பாக தர்சிகா கிருஸ்ணானந்தம் அவர்கள் பேர்ண் மாநிலத்தில் போட்டியிட்டர் தமிழ் உணர்வின்பால் அவருக்கு ஆதரவாகவும் தமிழர் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கவேண்டும் என கருதி மூன்று வாரங்களாக ஊடகவியாளர் மற்றும் தமிழ் உணர்வுள்ள இளைஞர்கள் இரவு பகல் இன்றி தொடர்சியாக பரப்புரைகளை மேற்கொண்டனர்.
அதிகளவான துண்டுபிரசுரங்களை பேர்ண் வாழ் மக்களிடம் வழங்கினர் ஊடகங்கள் மற்றும் முகநூல் ஊடக பரப்புரைகளையும் மேற்கொண்டு வந்தனர். தமிழ் மக்கள் வாழ்விடங்களிற்கு சென்று வாக்களிக்கும் முறைகளையும் தெரியப்படுத்தி தேர்தல்களில் தமிழர்கள் ஏன் வெற்றிபெறவேண்டும் என விளக்கிக் கூறி பரப்புரைகளை மேற்கொண்டனர்.
பல வருடங்களாக அந்த நாட்டு தேர்தல்களில் அக்கறையின்றிஇருந்த தமிழர்கள் இம்முறை அதிக அர்வத்துடன் வாக்களித்தனர் ஆனால் தமிழர்களின் வாக்குகள் ஒரு மாநிலத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கு போதது என்ற நிலை உள்ளது.ஆனால் தமிழர்கள் அனைவரும் இம்முறை தர்சிகா அவர்களுக்கு வாக்களித்தது தமிழ் மக்களிடம் அரசியலில் விழிப்புனர்வை ஏற்படுத்தியுள்ளது இந்த முறை தர்சிகா முதல் முறையாக போட்டியிட்டு 23927 விருப்புவாக்குகளை பெற்றது தமிழர்களின் எதிர்கால அரசியலுக்கு வழிகாட்டியாக அமையும் பல முறை தேர்தல்களில் போட்டியிட்டவர்களை பின் தள்ளி சிறந்த 25 பேர் அணியில் 15 இடத்தை தர்சிகா அவர்கள் பெற்றுள்ளார் அத்துடன் அவரது கட்சியில் உயர் பதவி மற்றும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள பேர்ண் மாநிலத்தின் உயர்சபைக்கு வேட்பாளராக கட்சி அறிவித்துள்ளது. தூண் நகராட்சி உறுப்பினராக எதிர்வரும் தைமாதம் தர்சிகா பதவியேற்கவுள்ளர் அரசியலுக்கு வந்து ஒரு வருடத்துக்குள் மிக வேகமாக வளர்த்துவரும் ஈழத்து பெண்மணியை உலக தமிழ் மக்கள் ஆதரிக்கவேண்டிய கடமைப்படும் பெறுப்பு உள்ளது அதே போன்று தேர்தலை எதிர்நோக்கும் தமிழர்களை அந்ததந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் ஆதரித்து நகராட்சி உயர்சபை, பாராளுமன்ற உறுப்பினராக உருவாக்கவேண்டும் அப்போதுதான் எமது உரிமைகள் தொடர்பாக நாங்கள் உரிமையுடன் பேசமுடியும் எனவே புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் எதிர்காலத்தில் அரசியலில் விழிப்படைய வேண்டும் என அவர்தெரிவித்துள்ளர்
No comments
Post a Comment