Latest News

October 13, 2015

பல வருடங்களாக இருந்த பொது மக்களுக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் காணியை மட்டும் கடற்படையினர் விடுவித்துள்ளனர்
by admin - 0

வலிகாமம் வடக்கு கீரிமலைப் பிரதேசத்தில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் பல வருடங்களாக இருந்த பொது மக்களுக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் காணியை கடற்படையினர் விடுவித்துள்ளனர்.

நீண்டகாலமாக கடற்படையினரிடம் இருந்த இந்தப் பிரதேசத்தில் சிறியளவில் அமைக்கப்பட்டிருந்த கடற்படை முகாமையும் அகற்றியுள்ள அதே வேளையில் அவர்களின் பாவனையில் இருந்த குறித்த மூன்று வீடுகளையும் விடுவித்து அதன் உரிமையாளர்களிடம் கையளித்துள்ளனர்.

கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இரானுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருக்கின்ற வலிகாமம் வடக்குப் பிரதேசம் பகுதி பகுதியாக தற்போது விடுவிக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய நேற்றையதினம் மூன்று ஏக்கர் நிலப்பரப்பை விடுவித்துள்ளனர்.

கீரிமகை; கேணிக்கு அருகாமையில் இருக்கின்ற இந்தக் காணியில் ஏற்கனவே ஒரு வீட்டினை பொது மக்களின் பாவனைக்காக விடுவித்திருந்த போதும் உத்தியோகபூர்வமாக பொது மக்களிடம் கையளயளிக்கப்படவில்லை. இந் நிலையில் மேலும் இரண்டு வீடுகளையும் உள்ளடக்கியதாக தனியாருக்குச் சொந்தமான முமூன்று ஏக்கர் காணியையும்; விடுவித்தனர்.

இந்தக் காணியையும் வீடுகளையும் மேற்படி பிரதேச செயலர் சிறிமோகனிடம் கடற்படையினர் கையிளித்தனர். இதனையடுத்து அந்தக் காணிகளும் வீடுகளும் உரிய பொதுமக்களிடமும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட மேற்படி வீட்டின் உரிமையாளர்கள் தமது வீட்டிற்க வந்து குடியேறியிரக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் வலி வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சோ.சுகிரதன், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதே வேளை வலி வடக்கில் விடுவிக்கப்பட்டு வருகின்ற காணிகள் வீடுகளின் தொடர்ச்சியாகவே நேற்றையதினம் கடற்படையினர் குறித்த மூன்று ஏக்கர் காணி மற்றும் மூன்று வீடுகளையும் விடுவித்திருப்பதாகவுமு; இதே போன்று விரைவில் அடுத்த கட்டமாக இhனுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருக்கின்ற காணிகளும் விடுவிக்கப்படவுள்ளதாகவுமு; தெரிவிக்கப்படுகின்றது.
« PREV
NEXT »

No comments