Latest News

October 13, 2015

துரோகத்தின் பரிசு. – ரஜணிகிருஸ்ணரஜனி
by admin - 0

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையில் பிள்ளையான் கைது செய்யப்பட்டிருக்கிறார். விடுதலைப்புலிகளை அழிப்பதனூடாக தமிழீழ நடைமுறை அரசையும் அதன் குடிமக்களையும் அழிக்கும் புரெஜெக்ட் பெக்கன் என்ற சிங்கள – பிராந்திய – மேறகுலக சதியின் ஒரு பகுதியாகவே ஜோசப் பரராஜசிங்கம் அழித்தொழிக்கப்பட்டார்.

ஏனென்றால் இவர் போன்றவர்கள் புலிகளின் அழிவுக்கு பிறகு உயிருடன் இருந்தால் அது புலிகளின் அரசியலின் நீட்சியாகவே இருக்கும் என்பதை கணக்கு போட்ட மேற்படி கூட்டணி அவரை அழித்தொழிக்கும் திட்டத்தை வரைந்து சிங்கள புலனாய்வுத்துறையினூடாக கருணா குழுவிடம் ஒப்படைத்தது.

தராகி சிவராம் அழித்தொழிக்கப்பட்டதும் இதன் ஒரு பகுதிதான்.

தற்போது சம்பந்தர் – சுமந்திரன் கூட்டணியை நாம் ஜோசப்பரராஜசிங்கத்தை வைத்தே சமாளித்திருக்க முடியும். கூட்டமைப்பிற்கு அவர் ஒரு கடிவாளமாக இருந்திருப்பார் அல்லது அதற்கு எதிரான குறிப்பாக த.தே.ம.மு போன்ற ஒரு கட்சிக்கு ஒரு தலைமையாக உருவெடுத்து தமிழ்த்தேசிய அரசியலை இணக்க அரசியலிலிருந்து ஒரு எதிர்ப்பு அரசியல் பரிமாணத்திற்குள் கொண்டுவந்திருப்பார்.

ஆனால் எதிரிகள் இவற்றையெல்லாம் கண்க்கில் கொண்டே துராநோக்கில் சிந்தித்து அவரை படுகொலை செய்தார்கள்.

தாம் எத்தகைய சதிவலையில் வீழந்திருக்கிறோம் என்று தெரியாமலேயே நாளை இந்த படுகொலைகளுக்காக இந்த கூட்டணியாலேயே கழுவிலேற்றப்படுவோம் என்பதை உணராமலேயே இந்த கொலையை கருணா – பிள்ளையான் கூட்டணி செய்து முடித்தது.

தற்போது அதற்கான ‘பரிசை’ பெறும் காலம் இது.

இன்று பிள்ளையான் நாளை கருணா கேபி உட்பட அனைவரும் சிங்களத்தால் ‘காட்டி’ கொடுக்கப்படுவார்கள்.

வரலாற்றில் துரோகிகளுக்கு கடைசியில் கிடைக்கும் பரிசு இதுதான்.

வரலாறு ஈவிரக்கமில்லாதது. அது தன் போக்கில் பழியை தீர்த்துகொள்ளும்.
« PREV
NEXT »

No comments