நல்லாட்சி அரசாங்கம் நல்லாட்சித் தத்துவத்தை வெறுமனே தென்னிலங்கைக்கு மட்டும் வெறுமனே நடைமுறைப்படுத்தாது வடக்கு கிழக்கு உட்பட நாடு பூராகவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று யாழ் ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அடிகளார் தெரிவித்துள்ளார்.
மகளீர் விவகார இராஐhங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் யாழ் ஆயர் இல்லத்திற்குச் சென்று யாழ் ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களைச் சந்தித்து பல்வெறு விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரமாகக் கலந்துரையாடினார்.
இதன் போது புதிதாகப் பதவியேற்ற ஆயருக்கு வாழ்த்துத் தெரிவித்த அவர் அதன் பின்னர் யாழ் சிறைச்சாலைக்குச் சென்று அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கைதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன் போது அரசின் செயற்பாடுகள் தொடர்பில் குறிப்பாக நல்லாட்சி அரசின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் எதிர்கால நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் ஆயருக்கு எடுத்துக் கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த ஆயர் நல்லாட்சி அரசாங்கமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது வெறுமனே தெற்குக்கு மட்டுமல்லாது வடக்கிற்கு நல்லாட்சியைச் செய்ய வேண்டும். அந்த அடிப்படையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க வேணடியது அவசியம ; என்றும் அமைச்சரிடம் தெரிவித்திருந்தார்.
No comments
Post a Comment