முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்ப்பையடுத்து, பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்தான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிகின்றன.
உயர் நீதிமன்ற நீதிபதிகளை பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்தான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டமைக்கே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பொது கட்டணம் செலுத்தாமல் அரசாங்க தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரங்களை பிரசுரித்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment