வடக்கில் அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் இருந்த பாதுகாப்பு தற்போதை இல்லை என்று தெரிவித்துள்ள புளொட் தலைவரும் யாழ் மாவட்ட எம்பியுமான சித்தார்த்தன் அப்போது சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அக்காலத்தில் திருவிழாவுக்குச் சென்றுவிட்டு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கும் எந்த வித அச்சமுமின்றி பெண்கள் தனியாக செல்லக்கூடிய நிலமை இருந்தது என்று குறிப்பிட்டுள்ள அவர் அவர்களின் பாதுகாப்பு அன்று உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.
அந்த நிலமை இன்று இல்லாமைக்கு வடக்கில் சட்டம் ஒழுங்கு சரியான முறையில் கடைப்பிடிக்காமையே காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மரண தண்டனை அமுல்படுத்தக் கோரும் சபை ஒத்தி வைப்பு பிரேரணை மீதான உரையின்போது உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
கா.பொ.த சாதாரண பரீட்சை எழுதிவிட்டு வீட்டில் உள்ள வேலையற்ற இளைஞர்கள் சினிமா படங்களை பார்த்து விட்டு அதில் வரும் குழுக்களைப் போல வாள்வெட்டுக் கலாசாரத்தில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டார்
No comments
Post a Comment