இலங்கை போலிஸார் குற்றவியல் கைதிகளை வழமையாகவே சித்ரவதை செய்து, முறையற்ற வகையில் நடத்துவதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கண்டித்துள்ளது.
இது குறித்து அது இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
போலிஸ் அமைப்பை கண்காணிக்க ஒரு சுயாதீன அமைப்பை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்றும் போலிஸாரின் துஷ்பிரயோகங்களை தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அது கேட்டிருக்கிறது.
குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை பெறுவதற்கான ஒரு சாதாரண வழியாக இலங்கை போலிஸார் சித்ரவதைகளை பயன்படுத்துவதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் இயக்குனர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கைக்கான ஆய்வுகளை தலைநகர் கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் 2014 மற்றும் 2015 ஆகிய வருடங்களில் நடத்தியது. இந்த அமைப்பின் முன்னைய அறிக்கைகள் போர் சார்ந்த துஷ்பிரயோகங்களை பற்றி பேசியிருந்தன. அதில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அனுபவித்த பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. ஆனால் இந்த புதிய அறிக்கை சிங்கள சமூக மக்களும் போலிஸாரால் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்கிறது.
இலங்கை போலிஸாரின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே இந்த விடயத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்று கூறும், தமிழ் கைதிகளின் விடுதலைக்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான சுந்தரம் மஹேந்திரன், அதற்கான விழிப்புணர்வு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்கிறார்.
அவர் தமிழோசைக்கு வழங்கி செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
No comments
Post a Comment