சுவிஸ்பாராளுமன்ற தேர்தல் நேற்று (18.10.2015)நிறைவு பெற்றது இதில் சோசலிச ஜனநாயக கட்சி சார்பாக பேர்ண் மாநிலத்தில் பலத்த சாவல்களுக்கு மத்தியில் போட்டியிட்டர்.
20 மேற்பட்ட கட்சிகளில் 1000 மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டபோதும் சோசலிச ஜனநாயக கட்சியில் மட்டும் 70 மேல்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 25 பெண்களை தெரிவு செய்த போது விருப்புவாக்குகள் அடிப்படையில் தர்சிகா 15 இடத்தை பெற்றுகொண்டர் இவருக்கு முன்னர் உள்ளவர்கள் நூற்றுக்காணக்கான வாக்குகளுடன் முன்னனியில் உள்ளனர் அத்துடன் மூன்று முறைக்கு மேல் தொடர்சியாக தேர்தலை சந்தித்தவர்கள் இந்த சூழ்நிலையில் முதல் முறையாக போட்டியிட்ட தர்சிகா 23927 வாக்குகளை பெற்றது அனைவரையும் கவர்ந்துள்ளர்.
இவருக்கு எதிர்காலத்தில் சிறந்த அரசியல் நிலை உள்ளமை இந்தேர்தல் எடுத்துகட்டியுள்ளது.
சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் தமது கடமையை சரியாக செய்துள்ளனர்.
இந்த தேர்தலில் எதிர்பாராத வகையில் கனிசமான விருப்பு வாக்குகளை பெற்றுகொண்ட தர்சிகாவுக்கு கட்சியில் பெரிய பதவியும் பேர்ண் மாநிலத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உயர்சபை தேர்தலுக்கு வேட்பாளராகவும் அவரின் கட்சி அறிவித்துள்ளது. தனதுக்கு வாக்களித்த தமிழ்மக்களுக்கும் சுவிஸ் வாழ்மக்களுக்கும் தான் வெற்றிபெறவேண்டும் என்று ஊடகங்கள் மற்றும் சமுகவலை தளங்கள் ஊடக வாழ்துக்களை தெரிவித்த மக்களுக்கும் பல வகைகளும் உதவிகளை வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் இந்த சந்தப்பத்தில் என்றும் நன்றி உணர்வுடன் கடமைபட்டுள்ளதாக தர்சிகா தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment