Latest News

October 31, 2015

சர்வதேசத்தில் தடம்பதித்த பீமாவின் உதைபந்தாட்ட வரலாறு
by admin - 0

சர்வதேசத்தில் தடம்பதித்த பீமாவின் உதைபந்தாட்ட வரலாறு 

பங்களாதேஷ் நாட்டில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச கழகங்களுக்கிடையில் உதைபந்தாட்ட போட்டியில் பங்குபெற்று தனது    திறமையை  வெளிபடுத்தினார் பீமா.

வடமாகாண வீர்ர்கள் பலர்  பங்குபற்றியபோது அவர்களின் முழுமையான வரலாறு என்னால் இதுவரை பெற்றுகொள்ளமுடியவில்லை

 பிறேம்குமார் தொடர்பாக எனக்கு தெரித்தவரை  பதிவுசெய்கின்றேன்
வடமராட்சி வதிரி அழகிய கிராமம் விளையாட்டுத்துறையில் நீண்டவரலாற்றை கொண்டது. 

1997 ஆண்டுகாலப்பகுதியில் வதிரி டயமன்ஸ் கழகத்துடன் எமது கழகம்  நட்பு ரீதியான கிரிகெட் சுற்றுப்போட்டி விளையாடுவது வழமை. 

மாலை நேரங்களில் டயமன்ஸ் மைதானத்தின் கிழக்கு பகுதியில் பீமா உதைபந்தாட்ட பந்துடன் வலம் வருவான் வாகீசன் என்ற நண்பன் பீமாவுடன் விளையாடுவது இன்றுவரை கண்ணுக்குள் நிழலாடுகினறது.

பின்னர் பீமாவின் 15-16 வயதில் நெல்லியடி மத்தியமகா வித்தியாலயத்தில் கரவெட்டி பிரதேச செயலகத்தின் உதைபந்தாட்ட இறுதிபோட்டியில் பீமா, தினேஷ், உஷா பிரகாஷ் போன்ற இளம்வீர்ர்கள் சிறப்பாக விளையாடினர்.

பின்னர் பீமா உதைபந்தாட்டத்தில் வடமராட்சி பிரதேசத்தில் சிறந்தவீரராக உருவானர் அத்துடன் பீமாவுக்கு அதிக ரசிகர்களும் உருவாகினர்.

 நானும் வடமராட்சி பிரதேசங்களில் நடைபெறும் டயமன்ஸ் கழகத்துக்காக எனது ஆதரவை வழங்கியருக்கிறேன்

அரவிந்தன், பீமா கூட்டனி முனகளத்தில்  நின்று வீளையாடும் அழகு தனி.

அரவிந்தன் கொடுக்கும் பந்தை பீமா எதிர்அணி வீர்ர்களை தாண்டி கோல் அடிப்பது ஒரு தனியழகு.

இவ்வாறு காலம் செல்லச் செல்ல பீமாவின் விளையாட்டு  திறன் மென்மேலும் வளர ஆரம்பித்தது. அவருடைய வளர்சிக்கு பலர் பலவிதமாக பங்களிப்பை வழங்கினர். பிரதேசம், மாவட்டம்,மாகாணம்' தேசியம் என படிபடியாக வளர்ந்த அவர் இன்று சர்வதேச போட்டியில் பங்களாதேஷ்சில் நடைபெற்ற  சர்வதேசங்களுக்கடையிலான போட்டியில் பங்குபற்றி தனது திறமையை வெளிபாடுத்தயுள்ளார்.

பல போராட்டங்களுக்கு மத்தியில் திறமையினால் உயர்ந்த வீர்ர் .


இவரைபோன்று வடமாகாண வீரர்கள் அனைவரும் விளையாட்டுத்துறையில் சர்வதேச ரீதியில் சாதனை படைக்கவேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பும் அவாவும் ஆகும்.

எதிர்காலத்தில் இலங்கை தேசிய வீரர் ஞானரூபன் ,பிறேம்குமார் ,ஜீட் சுபன் ,மதுசன் மற்றும் தேசிய ரீதியில் விளையாடிவரும்  தமிழ் வீரர்கள் எமது ஏனைய வீரர்களுக்கு வழிகாட்டியாகவும் துனையாக இருக்கவேண்டும்.
நாட்டில் நடைபெற்ற யுத்தத்தினால் தமிழர்கள் வேண்டுமென்றே விளையாட்டுத்துறையில் புறக்கணிக்கப்பட்டர்கள்.

வடக்கு கிழக்கு மற்றும் ஏனைய மாவட்டங்களில் வாழும் தமிழ் வீரர்கள் சர்வதேசத்தில் சாதனை படைக்கவேண்டும் என்பது அனைவரது பெரும் எதிர்பார்பாகும்


எஸ் .செல்வதீபன் 
« PREV
NEXT »

No comments