Latest News

October 26, 2015

விவ­சாய சங்கத் தலை­வரை தாக்­கிய மத்­திய மாகாண சபை உறுப்­பினர் கைது - இரண்டு இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீரப் பிணை­களில் விடு­தலை
by admin - 0

தம்­புள்ளை விவ­சாய சங்­கத்தின் தலை­வரை, தம்­புள்ளை பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தில் வைத்து தாக்­கிய குற்றச் சாட் டில் மத்­திய மாகாண சபையின் ஐக்­கிய தேசிய கட்சி உறுப்­பினர் ஹேரத் முதி­யன்­ச­லாகே திஸ்ஸ பண்­டார ஹேரத் தம்­புள்ளை பொலி­ஸா­ரினால் நேற்று கைது செய்­யப்­பட் டார்.
தம்­புள்ளை பொலி­ஸா­ருக்கு கிடைத்த முறைப்­பாட்­டுக்கு அமை­வா­கவே அவர் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும், பின்னர் அவர் தம்­புள்ளை நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­போது 2 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீரப் பிணை­களில் விடு­விக்­கப்­பட்­ட­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவ­தா­வது,

கடந்த 21ஆம் திகதி தம்­புள்ளை பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தில் வைத்து மாகா ண சபை உறுப்­பி­னரும் பிறி­தொ­ரு­வரும் சேர்ந்து தன்னை தாக்­கி­ய­தாக தம்­புள்ளை விவ­சாய சங்கத் தலைவர் பொலி­ஸா­ருக்கு முறைப்­பா­ட­ளித்துள்ளார். இது தொடர்பான விசாரணையை அடுத்து மாகாண சபை உறு ப்பினர் கைது செய்யப்பட்டார்.

இந் நிலையில் நேற்று தம்­புள்ளை நீதி­வா னின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்­துக்கு அழைத்துச் செல்­லப்­பட்ட சந்­தேக நப­ரான மாகாண சபை உறுப்­பினர் நீதிவான் முன் னிலையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட போது அவரை 2 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான சரீரப் பிணையில் செல்ல நீதிவான் அனு­ம­தித்தார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments