சனல்4 தொலைக்காட்சியின் கெலம் மக்ரே தயாரித்துள்ள நீதிக்கான தேடல் ஆவணப்படத்தை மனித உரிமைகள் ஆணைக்குழு மண்டபத்தில் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் வரலாற்றில் இவ்வாறானதொரு ஆவணப்படம் காட்சிப்படுத்த அனுமதி வழங்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
குறித்த ஆவணப்படத்தின் மூலமாக இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் தொடர்ச்சியான சர்வதேச கவனத்தை ஈர்க்க கெலம் மக்ரே குழுவினர் எதிர்பார்த்துள்ளனர்.
எனினும் குறித்த ஆவணப்படத்தை திரையிடாது தடுப்பதில் இலங்கையின் ராஜதந்திரிகள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
ஆணைக்குழுவினால் தயாரிக்கப்படாத , தனிநபர் ஒருவரின் ஆவணப்படம் திரையிடப்பட அனுமதியளிப்பது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டவிதிகளுக்கு முரணானது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
No comments
Post a Comment