தென் சிலியிலுள்ள கல்புகோ எரிமலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து குமுறி வருகிறது.
இந்நிலையில் மேற்படி பிராந்தியத்துக்கு இந்த மாதம் துணிகர பயணத்தை மேற்கொண்ட தீயணைப்புப் படைவீரரும் புகைப்படக்கலைஞருமான எட்வார்டோ மின்ட் (28 வயது) அந்த எரிமலை குமுறலை வெளிப்படுத்தும் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார்.
மேற்படி புகைப்படங்கள் சர்வதேச ஊடகங்களில் திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. அவர் புருட்டிலர் நகருக்கும் லலனடகுயிஹு நகருக்குமிடையிலுள்ள ஏரியில் படகுப் பயணத்தை மேற்கொண்டு இந்த அரிய புகைப்படங்களை எடுத்துள்ளார்.
40 வருட காலமாக உறங்கு நிலையிலிருந்த கல்புகோ எரிமலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் தடவையாக குமுறியது. அதற்கு 5 மாதங்கள் கழித்து தற்போது இந்த எரிமலை சிலியின் உயிர்ப்பான 90 எரிமலைகளில் மிக வும் அபாயகரமான 3 எரிமலை களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
No comments
Post a Comment