சிறைகளில் எமது தமிழ் இளைஞர்களை அரசியல் கைதிகளாக அடைத்து வைத்துக்கொண்டிருக்கும்போது நல்லாட்சி என்று கதைப்பது வெட்கக்கேடான செயல் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட காரியாலயத்தில் நடந்த பல்கலைக் கழக மாணவர் ஒன்றியங்களின் பிரதிநிதிகளின் கலந்துரையாடல்
நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இளைஞர்களின் கரங்களிலேயே ஒருநாட்டின் தலைவிதி தங்கியுள்ளது. இளைஞர்களை நல்வழிப்படுத்தவும் புரிந்துணர்வு, விட்டுக்கொடுக்கும் தன்மை என்பவற்றை வளர்க்கவும் விளையாட்டுக்கள் உந்துசக்தியாக அமைகின்றன. கடந்தகாலத்தில் விடுத லைப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக் கான இளைஞர்கள் எமக்காக மிகப்பெரிய தியாகங்களை புரிந்து மாண்டுள்ளனர். அவர்கள் இன்று அவ்வாறான தியாகங்க ளை செய்யாமல் இருந்திருப்பார்களானால் எமது அரசியல் பலம் இன்று சர்வதேசத்திற்கு சென்றிருக்காது.
ஒருநாள் அவர்களின் தியாகத்திற்கான தீர்வு எமக்கு கிடைக்கும் என்பதை நாம் மறந்துவிட முடியாது. தற்போது நல்லாட்சி மலர்ந்துள்ளதாக பலர் கூறுகின்றனர். ஆனால் இலங்கையில் உள்ள பல சிறை ச்சாலைகளில் எமது நூற்றுக்கணக்கான இளைஞர்கள் விடுதலை செய்யப்படாமல் இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என புதிய ஜனாதிபதியாக மைத்திரி பதவியேற்ற பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்தது.
அது நடைபெறவில்லை. தற்போது பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்து ஒரு மாதமாகிய போதும் எவருமே விடுதலை செய்யப்படவில்லை. எமது இளைஞர்கள் தொடர்ந்தும் சிறைகளில் வதைபடும் போது அவர்களை விடுதலை செய்யமுடியாத நிலை இனிமேலும் தொடரக்கூடாது .
எந்தப் பதவிகளை நாம் பெற்றாலும் சிறைகளில் உள்ள எமது இளைஞர்களை விடுதலைசெய்ய முடியாமல் இருக்குமானால் இவ்வாறான பதவிகளை தூக்கி எறியவும் குறிப்பாக எமது கட்சியும் நாங்களும் தயாராக இருக்கிறோம்
. எம்மில் சிலர் அரசியல் என்பது அபிவிருத்திதான் என்று கருதுகிறார்கள். அதனால் பதவிகளை அபிவிருத்திக்காக பயன்படுத்த வேண்டும் என நினைப்பதையிட்டு நாம் ஒன்றும் செய்யமுடியாது. எமது உரிமைக்கான போராட்டம் அபிவிருத்தியில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால் தந்தை செல்வா காலத்தில் எமது தலைவர்கள் பல அமைச்சுப் பதவிகளையும் சலுகைகளையும் பெற்று வடக்கு, கிழக்கு தாயகத்தை சிங்கப்பூராக மாற்றியிருக்க முடியும். அதனை தந்தை செல்வா செய்யவில்லை. எமக்கான சுயநிர்ணய உரிமை கிடைக்கவேண்டும். அதனூடான அபிவிருத்தியே எமக்கு தேவை என்பதில் இலட்சியப்பற்றுடன் செயலாற்றினார் என்றார் .
No comments
Post a Comment