Latest News

September 16, 2015

யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள் விசாரணை அவசியம்; மனித உரிமை பேரவை
by admin - 0

ஸ்ரீலங்காவில் யுத்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
புலிகளின் குரல் வானொலியின் செய்தியாளர் இசைப்பிரியா மற்றும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரை கொலை செய்தது ஸ்ரீலங்கா இராணுவம் கொலை செய்தமைக்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2002 ஆம் ஆண்டு தொடக்கம் 2012 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற பாரதூரமான வன்முறைகளின் வடிவங்களை ஐநா அறிக்கை அடையாளப்படுத்தியுள்ளது.

பெரும்பாலும் மோதல்களில் ஈடுபட்ட இரண்டு தரப்பும் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீதி கிடைப்பதற்கான அத்தியாவசிய நடவடிக்கையாக விசேட நீதிமன்மொன்றை உருவாக்கி, சர்வதேச நீதிபதிகள், வழக்கு தொடுநர்கள், சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்களை ஒருங்கிணைத்து இந்தக் குற்றங்கள் குறித்து ஆராயப்பட வேண்டும் என ஐநா அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவில் கொடூரமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமை தமது விசாரணை ஊடாக அப்பட்டமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசைய்ன் கூறியுள்ளார்.
கண்மூடித்தனமான ஷெல் தாக்குதல்கள், சட்டத்திற்கு புறப்பான கொலைகள், பலாத்காரமாக காணாமல் போகச் செய்தல், படுபயங்கரமான சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமை,சிறுவர்களை படையில் இணைத்தல் மற்றும் ஏனைய பாரிய குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒட்டு மொத்தமாக சர்வதேச சமூகத்திற்கு கவலை அளிக்கும் மிகவும் பாரிய குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் இந்த அறிக்கை ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
« PREV
NEXT »

No comments